இந்திய அணி - இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி...!
இந்தியா முதல் டி-20 போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
நேற்று முதலாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 53 ரன்கள், பெண் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு ஷிகர் தவான் 40 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அடுத்த வந்த கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 18-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய அணி முடிவில் 40.1 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில், 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரமிக்க வைத்தார். இதனால் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
இதன் மூலம் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.